நும் நாடு யாதென்றால்…

அட்லாண்டா வாழ் தமிழர்களுக்கு இனிய வணக்கம்,

அரிய தமிழர் வரலாற்றுத் தரவுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது நமது மிக முக்கியமான கடமை. அதை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள தமிழர் வரலாற்று ஆய்வாளர்களை அட்லாண்டா மாநகரத்தில் சந்திக்கும் ஒரு அரிய வாய்ப்பு.

சேர, சோழ, பாண்டியர் கால கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளை ஆழமாகக் கற்றுணர்ந்த தமிழ் சான்றோர்கள் வருகை தரவிருக்கின்றனர்.

இந்த நிகழ்வில்:

குழந்தைகளுக்கான தமிழ்ப்போட்டிகள்

மரபுக் கலைநிகழ்ச்சிகள்

மிகச் சிறப்பாக நடக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அட்லாண்டா வாழ் தமிழர்கள், இந்த நிகழ்வில் பங்கேற்று அதை சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
அட்லாண்டா தமிழர் பேரவை

சமூக ஊடக தொடர்புக்கு:
Website: atlantathamizharperavai.org
Facebook: AtlantaTamilarPeravai
Twitter: atlantatamilar
Instagram: atlantatamilarperavai
Whatsapp : https://chat.whatsapp.com/DiK4pAALTZ7JG9aN3yBrJc