நினைவேந்தல்

நமது அட்லாண்டா தமிழர் பேரவை, கடந்த பல ஆண்டுகளாக தமிழீழத்தில் அரங்கேறிய தமிழருக்கு எதிரான இனப்படுகொலை நாளான மே 18 அன்று ‘முள்ளிவாய்க்கால் நினைவு நாள்’ நிகழ்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. உலகமே வேடிக்கை பார்க்க, கொடூரமாய் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களை நினைவு கூற தமிழர்கள் பெருந்திரளாய் வந்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் உணர்வுகளை பதிவு செய்ய வேண்டுகிறோம்.

Tamil Genocide Remembrance Day May 18 2024 event flyer

இந்த ஆண்டு நமது ஜார்ஜியா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் (செனட்டர்) நபிலா இசுலாம் பார்க்சு அவர்கள் நம்முடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, ஜார்ஜியா மாநிலத்தில் மே 18-ந் தேதியை ‘முள்ளிவாய்க்கால் நினைவு நாளாக’ அறிவிக்க வரைவுத் தீர்மானத்தை வெளியிடுகிறார்.

தமிழர்கள், நாம் உணர்வாய் ஒன்று கூடுவோம்!

இவண்,
அட்லாண்டா தமிழர் பேரவை.

சமூக ஊடக தொடர்புக்கு:
Website: atlantathamizharperavai.org
Facebook: AtlantaTamilarPeravai
Twitter: atlantatamilar
Instagram: atlantatamilarperavai